தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்வராயன்மலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க புதிய அலுவலகம் அமைகிறது சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அடிக்கல் நாட்டினார்

24 Jul 2026, 9:35 pm
கல்வராயன்மலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க புதிய அலுவலகம் அமைகிறது சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அடிக்கல் நாட்டினார்

கல்வராயன்மலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க புதிய அலுவலகம் அமைகிறது சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அடிக்கல் நாட்டினார்

கள்ளக்குறிச்சி, ஜூலை 24- கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வெள்ளிமலை யில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 24) நடைபெற்றது.

விழாவில் புதிய அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசியதாவது: “கல்வராயன் மலைவாழ் மக்களின் அருமைத் தோழர் கே. பாஷா ஜான் நினைவாக, ‘தோழர் கே. பாஷா ஜான் நினைவ கம்’ என்று இந்த கட்டிடத்திற்குப் பெயர் சூட்டுகிறேன்.

1974-ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 50 ஆண்டு களாக இந்த மலையில் செங் கொடி பறக்கிறது என்றால், மலை வாழ் மக்கள் சுதந்திரமாக வாழ முடி கிறது என்றால், அதற்கு வித்திட்ட வர் பாஷா ஜான் ஆவார். ஜமீன்தாரரிடமிருந்து மலையை மீட்டவர் ஜமீன்தாரரிடமிருந்து இந்த மலையை அரசுக்குச் சொந்தமாக்கி யது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமே ஆகும்.

இந்தப் பிரச்சனை யை நாடாளுமன்றம் வரை கொண்டு சென்று, சிபிஎம் நாடாளு மன்றக் குழுத் தலைவர் ஏ. கே. கோபாலன் மூலமாக நடவடிக்கை எடுத்து, பல ஆண்டுகளாக ஜமீன் தார் வசமிருந்த கல்வராயன் மலைப் பகுதியை மீட்டு அரசுக்குச் சொந்த மாக்கப் பாடுபட்டவர்கள் தோழர் பாஷா ஜானும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும்தான் என்பதைப் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஷா ஜானுடன் இணைந்து, 1992-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த மலைப் பகுதியின் அனைத்துக் கிராமங்களுக்கும் நடந்தே சென்று பணியாற்றிய அனு பவம் எனக்கு உண்டு.

அப்போது இங்கே ஒரு கூரைக் கொட்டகை மட்டுமே இருக்கும். அங்கேயே தங்கி, அருகில் உள்ள ஓடைகளில் குளித்து, பல மாதங்கள் தங்கியி ருந்து இந்த மலைவாழ் மக்களுக் காகப் பணியாற்றிய நினைவுகள் என்றும் பசுமையாக இருக்கின்றன.

1997-ஆம் ஆண்டு பாஷா ஜான் மறைந்த பிறகு, அவரது நினைவாக வெள்ளிமலையில் அலுவலகம் கட்ட வேண்டும் என முடிவெடுத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

அப்போது நாம் உறுதியளித்தபடி, பாஷா ஜானுக்கு சிலையும் விரைவில் இங்கு அமைக்கப்படும். மலைவாழ் மக்கள் மீட்டெடுத்த 150 ஏக்கர் நிலம் இந்த அலுவலகத்தை அனைத் துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் உருவாக்க வேண்டும்.

கட்டுமானப் பணிகளுக்கு அனைத் துக் குடும்பங்களும் உதவிட வேண்டும்.

இன்றிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் திறப்பு விழா நடை பெற அனைவரும் உழைக்க வேண்டும். மலையில் அரசியல் செல்வாக்கு மிக்க நபர்கள் பலர் நிலங்களை வளைத்துப் போட்டுள்ளனர். இது சட்டத்திற்குப் புறம்பானது.

வன உரிமைச் சட்டத்தின் அடிப்படை யில் பழங்குடியினர் அல்லாத வேற்று நபர்கள் மலையில் நிலம் வாங்குவதும், ஆக்கிரமிப்பதும் சட்ட விரோதமாகும்.

அவ்வாறு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அவற்றை மீட்டு மீண்டும் மலை வாழ் மக்களிடம் ஒப்படைக்கும் பணியைத் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தொடரும்.

வெளி நபர்களின் ஆக்கிரமிப்புகளைத் தமிழக அரசு தொடர்ந்து அகற்றிட வேண்டும்.

2006-ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டம் மற்ற மாநிலங் களில் நடைமுறையில் உள்ளது போல் தமிழகத்திலும் முழுமை யாக அமல்படுத்தப்பட வேண்டும்.

தமிழக முதலமைச்சர் தமிழ் நாடு முழுவதும் வன உரிமைச் சட்டத்தின் மூலம் அனைத்து பழங் குடியினக் குடும்பங்களுக்கும் நில உரிமைகளும் ஏனைய நன்மைகளும் கிடைக்கும் வகை யில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மற்றும் சிபிஎம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு சண்முகம் பேசினார். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலதுணைத்தலைவர் வி. அண்ணாமலை தலைமையில் நடை பெற்ற விழாவில் மலைக்கமிட்டித் தலைவர் எ.செல்வராஜ் வரவேற் றார்.சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு, மாநிலப் பொதுச் செய லாளர் எ. பொன்னுசாமி, மாநிலப் பொருளாளர் எ. வி. சண்முகம், மாநிலத் துணைச் செயலாளர் இரா. சரவணன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் டி. எம். ஜெய்சங்கர்,தலைவர் தவிச டி.ஏழுமலை, மாவட்டத்தலை வர் ததீஒமு நிர்வாகி வே. ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணமூர்த்தி, மலைவாழ் மக்கள் சங்கச்செயலாளர் எஸ். அண்ணாமலை, பொருளாளர் எ.ராமன், கருமந்துறை கமிட்டி செயலாளர் கே.பாக்யராஜ், தலை வர் வி.சின்னமணி, செயலாளர் டி. தர்மலிங்கம், பொருளாளர் சி. வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.