தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமானப்படுத்தும் செயல் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம்

31 May 2026, 8:48 pm
காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமானப்படுத்தும் செயல் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம்
<p><strong>காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமானப்படுத்தும் செயல் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம்</strong></p><p>சென்னை, மே 31- சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சனியன்று நடைப்பெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில், வைக்கப்பட்டிருந்த பேனரில், திருவள்ளுவர் காவி நிற உடை அணிந்திருப்பதைப் போன்றும், அவரது நெற்றியில் பட்டை இருப்பது போன்றும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த சர்ச்சைக்குரிய புகைப்படத்திற்குப் புதிய பொறுப்பு ஆளுநரான அர்லேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலை யில், ஆளுநரின் இந்த அடாவடி செயலுக்கு மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என சமத்துவத்தை வலியுறுத்திய திருவள்ளுவரை சனாதனி என்று வரையறுக்கும் தமிழ்நாடு ஆளுநரின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது. எம்மதத்தையும் சாராதவரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமானப்படுத்தும் செயல். ஆளுநர் அர்லேகர் இச்செயலுக்காக தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.