அமெரிக்க ஏகாதிபத்திய அராஜகமே சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு மூல காரணம்
7 Jun 2026, 9:01 pm

அமெரிக்க ஏகாதிபத்திய அராஜகமே சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு மூல காரணம்

விலை உயர்வை மக்கள் தலையில் ஏற்றும் மோடி அரசு

சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம்

புதுக்கோட்டை, ஜூன் 7- சர்வதேசச் சந்தையைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு விலையை உயர்த்தி வரும் ஒன்றிய அரசு, சாமானிய மக்களின் வாழ்க்கையை நெரித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் ஞாயிற்றுக் கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரது, பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மக்களின் வாழ்க்கையை நெரிக்கும் எரிபொருள் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் ஏற்கனவே தவித்து வரும் சூழலில், வணிக சிலிண்டர் விலை 3,500 ரூபாய் உயர்த்தப்பட்டும் சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. 5,000 முதல் 6,000 ரூபாய் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதால், உணவகங்களில் 10 முதல் 15 விழுக்காடு வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மேலும் ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை விலையைக் காரணம் காட்டி ஒன்றிய ஆட்சியாளர்கள் தப்பிக்கப் பார்க்கிறார்கள். ஒன்றிய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு வரிகளை உயர்த்தி மக்களின் வாழ்க்கையை நெரித்து வருகின்றன.

அமெரிக்க - இஸ்ரேல் யுத்தமும் கியூபா ஒருமைப்பாடும்

உள்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டிற்கு ஈரான் மீது அமெரி க்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள யுத்தமே முதன்மை காரணமாகும். 90 நாட் களைக் கடந்தும் போர் நிறுத்த வாய்ப்பு காணப்படவில்லை. அமெரிக்க நாடா ளுமன்றத்தின் கீழவையில் டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அவருக்குப் பெருத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கியூபா மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார நெருக்கடி களை ஏவி வருகிறது. அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் அராஜக நடவடிக்கை களைக் கண்டித்தும், கியூப மக்களுக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வித மாகவும், சேகுவேரா பிறந்த தினமான ஜூன் 14-ஆம் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து முக்கியத் நகரங்களில் மாபெரும் கண்டன நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்.

ஒன்றிய அரசின் தோல்வியும் இளைஞர் கொந்தளிப்பும்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நாட்டின் இளைஞர்களைக் ‘கரப்பான் பூச்சிகள்’, ‘ஒட்டுண்ணிகள்’ என விமர்சித்ததால் நாடு முழுவதும் கடுமை யான கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உருவான ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ எனும் அரசியல் எதிர்ப்பியக்கத்தில் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். கியூட், நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளிலும் ஒன்றிய அரசு மிகப்பெரிய முறைகேடுகளில் ஈடு பட்டுள்ளது. இத்தகைய கல்வித் துறை தோல்விகளுக்குப் பொறுப் பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜி னாமா செய்ய வேண்டும். இதனை வலி யுறுத்தி தில்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பும் பங்கேற்றுள்ளது.

பாராட்டுக்குரியது

'திருப்பரங்குன்றம் மலைமேல் தீபம் ஏற்றும் விவகாரத்தில், கடந்த ஆட்சி யின் நிலைப்பாடே தொடரும் என்ற சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் கருத்தை வரவேற்கிறோம். நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப தீர்ப்பு வழங்குவது நியாய மில்லை என்பதை மாநில அரசு உணர்ந்துள்ளது பாராட்டுக்குரியது.

இந்தியா கூட்டணி

இந்தியா கூட்டணியை நாங்களும் இணைந்துதான் உருவாக்கினோம், இதன் கூட்டங்களில் எங்களது அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற் பார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி க்கும் பாஜகவிற்கும் தொடர்பு இருப்ப தாக ராகுல்காந்தி பேசியிருப்பது பக்குவமில்லாத பேச்சு. குறுகிய அரசியல் நோக்கத்தோடு பேசிய அவரின் கருத்துக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைவருக்கு முறைப்படி கடிதம் எழுதப்பட்டுள்ளது.

முக்கியக் காரணம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்த லில் திமுக, அதிமுக கூட்டணிகளை மக்கள் புறக்கணித்துவிட்டனர். தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு அளித்ததற்கு முக்கிய காரணம், குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதுதான். தவெக ஆட்சியில் முற்றிலும் புதிய வர்கள் வந்திருக்கிறார்கள், அவர் களுக்குக் குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் 5 ஆண்டுகளுக்கானது, அதனை 15 நாட்களுக்குள் நிறை வேற்றச் சொல்வது பொருத்தமல்ல.

சட்டம் - ஒழுங்கு

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தை கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்வது கவலையளிக்கிறது. எனினும், சமீபத்திய சம்பவங்களில் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு களைத் தாமதமின்றி நடத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும். அனைத்துக் குற்றங்களுக்கும் முதன்மைக் காரணி யாக விளங்கும் போதைப்பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு உறு தியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பிரச்சனைகளின் அடிப்படையில்...

தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இல்லை; மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியும் இல்லை. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தேஜகூ கட்சிகள் தனித்தனி நிலைப்பாடே எடுத்தன. மக்கள் நலனுக்கான ஒத்த கருத்துடைய பிரச்சினைகளில் திமுக வோடு இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். தவெக ஆட்சியை நாங்கள் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை; ஜோதிடரை முதலமைச்சரின் ஆலோ சகராக நியமித்த போது வன்மையாக எதிர்த்தோம். பிரச்சினைகளின் அடிப் படையில்தான் எங்களின் ஆதரவும் எதிர்ப்பும் இருக்கும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை அவர்கள்தான் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். பாஜக என்ற பெயர் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதால், அமித் ஷா மற்றும் மோடியின் ஆசியோடு அண்ணா மலை தனிக்கட்சி தொடங்குகிறார். இப்புதிய கட்சியையும் தமிழ்நாட்டு மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிப் பார்கள். சில இடங்களில் நிலவும் மின்தட்டுப் பாட்டை அரசு சீரமைக்க வேண்டும். தமிழகத்தில் 717 அரசு மதுபானக் கடை களை மூடிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு, ரயில் நிலை யங்களில் உள்ள மதுக்கடைகளையும், மனமகிழ் மன்றங்களையும் அகற்ற வேண்டுமெனத் தொடர்ந்து வலி யுறுத்துகிறோம். இவ்வாறு பெ.சண்மு கம் தனது பேட்டியில் குறிப்பிட்டார். செய்தியாளர் சந்திப்பின் போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். (ந.நி.)