தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து சிபிஎம் சார்பில் சாலை மறியல் போராட்டம்

16 Jul 2026, 9:57 pm
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து  சிபிஎம் சார்பில் சாலை மறியல் போராட்டம்
<p><strong>குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து சிபிஎம் சார்பில் சாலை மறியல் போராட்டம்</strong></p><p>திருத்துறைப்பூண்டி, ஜூலை 16- திருவாரூர் மாவட்டம் திருத்து றைப்பூண்டி அருகே, நெடும்பலம், மங்கநாயகிபுரம் கிராமத்திற்கு உரிய முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மங்கநாயகிபுரம் நெடும்பலம் கிராமத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண்கள், முதியோர், மாணவர்கள் உள்ளிட்டோர் குடிநீருக்காக தினமும் பல கிலோமீட்டர் தூரம் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் தலைமை தாங்கினார். டி.வி. காரல்மார்க்ஸ், ஒன்றியச் செயலாளர் டி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.