தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடியிருப்புகளுக்கு இடையே குப்பை திருவிக நகரில் சிபிஎம் சாலை மறியல்

24 Nov 2025, 3:26 pm
குடியிருப்புகளுக்கு இடையே குப்பை  திருவிக நகரில் சிபிஎம் சாலை மறியல்
<p><strong>குடியிருப்புகளுக்கு இடையே குப்பை &nbsp;திருவிக நகரில் சிபிஎம் சாலை மறியல்</strong></p> <p>சென்னை, நவ. 24- குடியிருப்புகளுக்கு இடையே குப்பை கொட்டுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட 73ஆவது வட்டம் காந்தி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்நிலை யில் சென்னை மாநகராட்சி குடியிருப்பு களுக்கு இடையே காலியாக உள்ள இடத்தில் கடந்த இரண்டு நாட்களாக குப்பைகளை கொட்டத் தொடங்கினார். தினசரி 40க்கும் மேற்பட்ட லாரிகளில் குப்பைகளை கொட்டுவதால் அங்கு மலை போல் குப்பைக் கழிவுகள் தேங்கின. மேலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவ தோடு, தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினார். இதற்கிடையே குடியிருப்புகளுக்கு இடையே குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பகுதிச் செயலாளர் வி.செல்வ ராஜ் தலைமையில் சாலை மறியல் திங்களன்று (நவ. 24) நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும், ஒப்பந்ததாரரும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இனிமேல் குப்பைகளை கொட்ட மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தனர். குப்பைகளை அள்ளத் தொடங்கும் பணியும் உடனே தொடங்கப்பட்டது. இதையடுத்து மறி யலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்தீஷ் குமார், நிர்வாகிகள் பா.தேவி, இருதயராஜ், கிருஷ்ணன், கே.சுரேஷ்குமார், அசோக் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.