என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தோர் பிரச்சனை ஆட்சியர் தலையிட சிபிஎம் கோரிக்கை
18 Dec 2025, 5:31 pm
<p><strong>என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தோர் பிரச்சனை ஆட்சியர் தலையிட சிபிஎம் கோரிக்கை</strong></p>
<p>கடலூர், டிச.18- என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் மற்றும் வீடு கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை உள்ளிட்ட நீண்ட காலப் பிரச்சனைகளைத் தீர்க்க மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது. சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் ஆர்.கே. சரவணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பிரகாஷ், பொருளாளர் டி. கிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று இந்த மனுவை அளித்தனர்.</p>
