ஆழ்துளை கிணற்றுக்கு மின் வசதி தேனி மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை
11 May 2026, 11:55 pm
<p><strong>ஆழ்துளை கிணற்றுக்கு மின் வசதி தேனி மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை</strong></p><p>தேனி, மே 11- ஆண்டிபட்டி ஒன்றியம், மாயாண்டிபட்டி கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன் படுத்தும் ஆழ்துளை கிணற் றுக்கு மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும் என தேனி ஆட்சியரிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆண்டிபட்டி ஒன்றியம், கண்ணியப்பபிள்ளைபட்டி ஊராட்சி, மாயாண்டிபட்டி இந்திரா குடியிருப்பில் பட்டி யலின மக்கள் வாழ்ந்து வரு கிறார்கள். கடந்த 2023-2024 ஆம் ஆண்டில் நிதி மானி யத்தில் ரூ.4 லட்சம் மதிப் பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. எனினும் மின் இணைப்பு வழங்கவில்லை. கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், ஆண்டிபட்டி ஒன்றிய பொறுப்பு செயலாளர் எஸ். மீனாட்சி சுந்தரம், ஒன்றி யக்குழு உறுப்பினர் கே.கே. முருகன் ஆகியோர் மாயா ண்டிபட்டிக்கு சென்ற போது பட்டியலின மக்கள் மின் இணைப்பு வழங்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி விநியோகம் செய்ய நட வடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில் இந்திரா நகர் கிளை செயலாளர் எம். பாலுச்சாமி தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் புகார் அளித்தார்.</p>
