தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் விடுத்த கோரிக்கையால் நடவடிக்கை மறுகால் பாய்ந்த சைபன் கால்வாயில் சீரமைப்புப்பணி துவங்கியது

16 Jul 2026, 9:41 pm
சிபிஎம் விடுத்த கோரிக்கையால் நடவடிக்கை மறுகால் பாய்ந்த சைபன் கால்வாயில் சீரமைப்புப்பணி துவங்கியது
<p><strong>சிபிஎம் விடுத்த கோரிக்கையால் நடவடிக்கை மறுகால் பாய்ந்த சைபன் கால்வாயில் சீரமைப்புப்பணி துவங்கியது</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 16- சிபிஎம் விடுத்த கோரிக் கையால் ,மறுகால் பாய்ந்த சைபன் கால்வாயில் சீர மைப்புப்பணி துவங்கியது. கன்னியாகுமரி மாவட் டம் பார்வதிபுரம் வழியே செல்லும் அனந்தனார் கால்வாய் வல்லன்குமா ரன்விளை என்ற இடத்தி லிருந்து பிரிந்து அத்திக்கடை கால்வாயாக கடைவரம்பு நோக்கி செல்கிறது. நீர் வளத்துறைக்கு சொந்தமான இநத் அத்திக்கடை கால் வாய் செல்லும் நங்கூரன் பிலாவினை பகுதியில் உள்ள சைபனில் தேங்கும் செடிகள் மற்றும் குப்பை களால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் மறுகால் பாய்ந்தது. இத் தண்ணீர் அருகில் உள்ள பொட்டல்-புத்தன்துறை சாலை வழி யே வழிந்தோடி செல்வதால் சாலையோரம் அரிப்பு ஏற் பட்டு வாகனப் போக்கு வரத்து தடைபடும் ஆபத்து ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து தண்ணீர் மறுகால் பாய்ந்து வழிந் தோடி செல்வதால் பொது மக்கள் சாலை வழியே நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்களில் செல்வோர் சாலையில் வழுக்கி விழுந்து காயமடை யும் நிலையும் ஏற்பட்டது. எனகவே மேற்படி தண்ணீரால் சாலையில் பாதிப்பு ஏற்படுவதை தடுத் திடவும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கிடவும், சைபன் பகுதியில் அடைப்பு ஏற்படு வதை அவ்வப்போது சரி செய்து செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி நடவ டிக்கை எடுத்திட வேண்டும் என்று சிபிஎம் ராஜாக்கமங்க லம் ஒன்றியச் செயலாளர் ராஜ்குமார் மாவட்ட ஆட்சி யருக்கு கோரிக்கை விடுத்தி ருந்தார். அந்த கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் உடனடி யாக அங்கு சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.