மம்தா பானர்ஜியின் அழைப்பை நிராகரித்தது சிபிஎம்
10 May 2026, 9:03 pm

மம்தா பானர்ஜியின் அழைப்பை நிராகரித்தது சிபிஎம்

கொல்கத்தா சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்ட மன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியின் மீதான அதிருப்தி, எஸ்ஐஆர் மூலம் நீக்கப்பட்ட வாக்குகளின் உதவியால் பாஜக மொத்தமுள்ள 294 தொகுதி களில் 207இல் வெற்றி பெற்று முதன்முறை யாக ஆட்சி அமைத்தது.

அதே சமயத்தில் 80 தொகுதிகளில் மட்டுமே வென்று 3 முறை மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த மம்தா பானர்ஜியின் திரிணாமல் காங்கி ரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டப் பின்பு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை யும் பாஜக தங்கள் பக்கம் வளைத்துள்ளது. மிக முக்கியமாக கடந்த 2 தேர்தல்களை விட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணியின் வாக்கு சதவீதம் அதி கரித்துள்ளது. இதனால் கலக்கமடைந்துள்ள மம்தா பானர்ஜி சனியன்று,”பாஜவை எதி ர்க்கும் இடதுசாரிகள் உட்பட அனைத்து எதிர்க் கட்சிகளும், மாணவர் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்பு களும் பாஜவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். இதில் தேசிய கட்சிகளும் இணைய வேண்டும். இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்பி னால், பேசத் தயாராக இருக்கிறேன்” எனக் கூறி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், மம்தா பானர்ஜியின் அழைப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம் கூறுகையில்,”கண்டிப்பாக இல்லை! குற்றப்பின்னணி கொண்டவர்கள், மிரட்டி பணம் பறிப்பவர்கள், ஊழல்வாதிகள் மற்றும் மதவாத பின்னணி கொண்டவர்கள் எவ ருக்கும் அனுமதி இல்லை. அதே நேரத்தில், சாமானிய மக்களும் விளிம்புநிலை மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும்” என கூறியுள் ளார்.