தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக அரசே, புல்டோசர் - வெறுப்பு அரசியலை உடனடியாக நிறுத்து! முர்ஷிதாபாத்தில் சிபிஎம் மாபெரும் பேரணி

22 May 2026, 8:43 pm
பாஜக அரசே, புல்டோசர் - வெறுப்பு அரசியலை உடனடியாக நிறுத்து! முர்ஷிதாபாத்தில் சிபிஎம் மாபெரும் பேரணி

பாஜக அரசே, புல்டோசர் - வெறுப்பு அரசியலை உடனடியாக நிறுத்து! முர்ஷிதாபாத்தில் சிபிஎம் மாபெரும் பேரணி

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வெறுப்பு மற்றும் புல்டோசர் அரசியலை தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தலித், முஸ்லிம் உள் ளிட்ட சிறும்பான்மையினர்களின் வீடுகளை தொடர்ச்சியாக இடித்து வருகிறது.

இந்நி லையில், மேற்கு வங்க பாஜக அரசின் புல்டோசர், வெறுப்பு அரசியலை உடனடி யாக நிறுத்தக் கோரி முர்ஷிதாபாத்தின் ரகு நாத்கஞ்ச் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பேரணி, பொதுக் கூட்டம் நடைபெற்றது.

சிபிஎம் மேற்கு வங்க மாநிலக் குழு உறு ப்பினரும், முர்ஷிதாபாத் மாவட்டச் செய லாளருமான ஜமீர் மொல்லா, மாநிலக் குழு உறுப்பினர் சத்ரூப் கோஷ், புதிதா கத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொம்கல் தொகு தி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் (சிபிஎம்) ஆகியோர் தலை மையில் பிரம்மாண்ட பேரணி நடை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 1. எஸ்ஐஆர் நடைமுறையில் மறுபரி சீலனை அல்லது சரிபார்ப்பில் வைக்கப் பட்டுள்ள பெயர்களுக்கு உடனடியாகத் தீர்வு கண்டு, அவர்களது வாக்குரிமையை மீண்டும் வழங்க வேண்டும். 2. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களது சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்.

3. மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் புல்டோசர் அரசியலுக்கும், வெறுப்பு அரசியலுக்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.