சிபிஎம் புதுச்சேரி மாநிலக்குழு உறுப்பினர் கே. கலியன் மறைவு: தலைவர்கள் அஞ்சலி
28 Dec 2025, 5:05 pm
<p><strong>சிபிஎம் புதுச்சேரி மாநிலக்குழு உறுப்பினர் கே. கலியன் மறைவு: தலைவர்கள் அஞ்சலி</strong></p>
<p>புதுச்சேரி, டிச. 28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு உறுப்பினர் கே. கலியன் சிகிச்சை பலனின்றி (வயது 58) உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச் சேரி மாநிலக் குழு உறுப்பினரும், சிஐடியு புதுச்சேரி மாநிலத் துணைத் தலைவர், அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன புதுச்சேரி கௌரவத் தலைவருமான கே. கலியன் சிறிது காலம் உடல்நலம் பாதிக் கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு (டிச. 27) காலமானார். புதுச்சேரியின் கட்சி வளர்ச்சிக்கும் தொழிற்சங்க வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக் கும் ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், புதுச்சேரி மாநிலக்குழு ஒருங்கிணைப்பாளர் வி. பெரு மாள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து ள்ளனர். இறுதி நிகழ்ச்சி புதுச்சேரி பாகூர் அடுத்துள்ள குருவி நத்தம் பகுதியில் அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு ஒருங்கிணைப்பாளர் வெ. பெருமாள், மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் சுதா, ராஜாங்கம், தமிழ்ச்செல்வன், சீனுவாசன், கொளஞ்சி யப்பன், சத்தியா, கலியமூர்த்தி, பாகூர் கமிட்டி செயலாளர் சரவணன் உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அன்னாரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடை பெற்ற புகழஞ்சலி கூட்டத்தில் தலை வர்கள் பங்கேற்றனர். பின்னர் தென் பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள இடு காட்டில் அன்னாரது உடல் அடக்கம் செய்யப் பட்டது.</p>
