வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ.4,000 வீட்டு வாடகைப்படி வழங்குக புதுச்சேரியில் சிபிஎம் பிரச்சாரம்!
8 Jul 2026, 1:35 am

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ.4,000 வீட்டு வாடகைப்படி வழங்குக புதுச்சேரியில் சிபிஎம் பிரச்சாரம்!

புதுச்சேரி, ஜூலை 7- ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வாடகைப்படியாக மாதம் ரூ.4,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் புதுச்சேரியில் மாபெரும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. முக்கிய கோரிக்கைகள் வாடகை வீட்டில் வசிக்கும் ஏழை மக்களைப் பாதுகாக்க, அரசு அடுக்கு மாடி குடியிருப்புகளை விரைந்து கட்டித்தர வேண்டும். வீடு கட்டித் தரும் வரை மாதந்தோறும் ரூ.4,000 வீட்டு வாடகைப்படியாக வழங்க வேண்டும். நகரப் பகுதிகளில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.ஆர்.எஃப் (MRF) நிறுவனத்தில் அநீதியாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள போலி மருந்து தயாரிப்பு ஊழல் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் மீது சி.பி.ஐ. (CBI) விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்த பிரச்சாரத்தின் போது வலியுறுத்தப்பட்டது. ஆவேச முழக்கங்கள் புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே தொடங்கிய இந்த பிரச்சாரத்திற்கு, நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். மூத்த தலைவர் முருகன் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். மாநில செயலாளர் ராமச்சந்திரன் நிறைவுரையாற்றினார். நேரு வீதி, காந்தி வீதி மற்றும் மிஷன் வீதி ஆகிய முக்கியப் பகுதிகளில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், சீனுவாசன், கலியமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் மதிவாணன், சரவணன், கமிட்டி உறுப்பினர்கள் வீரமணிகண்டன், மணவாளன், கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.