தூத்துக்குடி மாவட்டத்தில் சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்
yesterday

தூத்துக்குடி மாவட்டத்தில் சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

தூத்துக்குடி, செப். 1-ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதகொள்கைகளை விளக்கியும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.தூத்துக்குடி மாநகரில் பிரச்சார இயக்கத்தை மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் டி. ரவீந்திரன் தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ரசல், மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து, மாநகரக் குழுஉறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்தில் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஒன்றியப் பகுதிகளில் தீவிரப் பிரச்சாரம்கோவில்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 கிளைகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மணியாச்சி பகுதியில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு அழகுபாண்டி தலைமை வகித்தார். மாநில செயற்குழு

உறுப்பினர் அர்ஜுனன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மணி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும்கிளைச்செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி ஒன்றியம் தாளமுத்துநகர் பகுதியில் ஒன்றிய செயலாளர் சங்கரன் தலைமையில் நடைபெற்றது. நிறைவாக புதுக்கோட்டை பஜாரில் மாவட்டக் குழு உறுப்பினர் ரவிதாகூர் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அப்பாதுரை, ஒன்றிய செயலாளர் கே.சங்கரன் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் பகுதி புதியம்புத்தூரில் நகர செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கே.எஸ்.அர்ச்சுனன், ஒன்றிய செயலாளர் த.சண்முகராஜ் ஆகியோர் பேசினர்.திருவைகுண்டத்தில் பிரச்சாரக் கூட்டம்நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முத்தையாபுரம் பல்க் பஜாரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்கு தூத்துக்குடி புறநகர செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து ஆகியோர் பேசினர்.