சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்
9 hours before

சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

வில்லிவாக்கம் பகுதியில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கி வைத்து மக்களிடம் துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம் செய்தார். கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர் ஜி.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் கே.முருகன், பகுதிச் செயலாளர் சி.மார்ட்டின், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மனோன்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் அம்பத்தூரில் பகுதிச் செயலாளர் இரா.கோபி தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவணத்தமிழன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட படப்பையில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் சாமிநாதன் தலைமையில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கே.நேரு, ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ், அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வியாழனன்று (ஆக 27), நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் த.கன்னியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.