தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தியாகி ராமநாதன் நினைவு நாளையொட்டி ஜூன் 20-ல் சிபிஎம் பொதுக்கூட்டம்

17 Jun 2026, 9:20 pm
தியாகி ராமநாதன் நினைவு நாளையொட்டி ஜூன் 20-ல் சிபிஎம் பொதுக்கூட்டம்

தியாகி ராமநாதன் நினைவு நாளையொட்டி ஜூன் 20-ல் சிபிஎம் பொதுக்கூட்டம்

மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்கிறார்

சிவகங்கை, ஜூன் 17- தியாகி ராமநாதன் நினைவு நாளையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் திருப்பத்தூரில் ஜூன் 20 ஆம் தேதி மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்று மாவட்டச் செயலாளர் மோகன் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தியாகி ராமநாதன், இப் பகுதி விவசாயிகளின் உரி மைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன் னின்று நடத்தியவர். விவ சாயிகளை ஒருங்கிணைத்து போராட்டத்தை வழிநடத் திய அவர், விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறை களுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

தோழர் சீனிவாசராவுடன் இணைந்து நாச்சியாபுரம், கம்பனூர் உள்ளிட்ட பகுதி களில் விவசாய சங்கங் களை உருவாக்கி செயல் பட்டார். அ

வரது மக்கள் நலப் பணிகளை தடுக்க பொய் வழக்கில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

சிறையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு எதி ரான நடவடிக்கைகளை கண் டித்து நடைபெற்ற போராட் டத்தில் சிறைக் காவலர் களால் தாக்கப்பட்டு உயிரி ழந்தார்.

அவருடைய தியா கத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வரு கிறது.

அதன்படி, ஜூன் 20-ஆம் தேதி காலை 9 மணிக்கு நாச்சியாபுரத்தில் தியாகி ராமநாதன் நினைவு தின செங்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அதே நாளில் மாலை 4 மணிக்கு திருப்பத்தூரில் நினைவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநில செயற் குழு உறுப்பினர் எம்.அர்ஜு னன், மாநிலக் குழு உறுப்பி னர் பொன்னுத்தாய், திருப் பத்தூர் தாலுகா செயலாளர் முருகேசன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆறு முகம், சேதுராமன், காரைக் குடி தாலுகா செயலாளர் அழகர்சாமி, தேவகோட்டை தாலுகா செயலாளர் செல்வ ராஜ், மாவட்டக் குழு உறுப்பி னர் பொன்னுச்சாமி, சிவ கங்கை ஒன்றிய செயலாளர் உலகநாதன், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மாநில மாவட்ட துணைத் தலைவர் சாந்தி, சிங்கம் புணரி தாலுகா செயலாளர் காந்திமதி மற்றும் பலர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.

எனவே, சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள கட்சியினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திர ளாக கலந்து கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் மோகன் கேட்டுக் கொண் டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.