கீரமங்கலத்தில் சிபிஎம் பொதுக்கூட்டம் ரூ.1.50 லட்சம் நிதியளிப்பு
22 Feb 2026, 3:26 pm
<p><strong>கீரமங்கலத்தில் சிபிஎம் பொதுக்கூட்டம் ரூ.1.50 லட்சம் நிதியளிப்பு</strong></p>
<p>புதுக்கோட்டை, பிப்.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியக்குழு சார்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜசேகரன் நினைவேந்தல், கட்சி வளர்ச்சி நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை கீரமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனராஜ், கட்சியின் வளர்ச்சி நிதி முதல் தவணையாக ரூ.1,50,000 பெற்றுக் கொண்டு உரையாற்றினார். பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆ. குமாரவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் கி. ஜெயபாலன், சு. மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் எல்.வடிவேல் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்வில் ஆலங்குடி விடியல் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.மணிவண்ணன் வரவேற்க, ஒன்றியக்குழு உறுப்பினர் என்.தமிழரசன் நன்றி கூறினார்.</p>
