தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

3 Mar 2026, 3:38 pm
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>தருமபுரி, மார்ச் 3- குறவன் திண்ணை கிராமத்திற்கு &nbsp;ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியினர் காலிக்குடங் களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் ஒன்றியம், பிக்கிலி ஊராட்சிக்குட் பட்ட குறவன் திண்ணை கிராமத்தில் &nbsp;வசிக்கும் சுமார் 100 குடும்பங்க ளுக்கு, கடந்த 4 ஆண்டுகளாக ஒகே னக்கல் குடிநீர் விநியோகம் செய்யப் படவில்லை. எனவே, இப்பகுதி மக்க ளுக்கு ஒகேனக்கல் குடிநீர் திட்டத் தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குடிநீர் &nbsp;வழங்க வேண்டும். கரிப்பள்ளம், கூட் டாறு பகுதியில் தோண்டப்பட்டுள்ள பொதுக் கிணறுகளிலிருந்து, புதிய &nbsp;குழாய் அமைத்து இக்கிராமத்தி லுள்ள மேல்நிலை குடிநீர்த் தொட்டி &nbsp;மூலமாக குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி &nbsp;தலைமையில் அப்பகுதி பொது மக்கள் செவ்வாயன்று காலிக்குடங்க ளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்கள் செல்வ ராஜ், குமார் ஆகியோர் தலைமை &nbsp;வகித்தனர். கட்சியின் மாவட்டச் செய லாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. மாதன், வே.விஸ்வநாதன், ஜி.சக்தி வேல் ஆகியோர் கோரிக்கைகளை &nbsp;வலியுறுத்தி பேசினர். இதில் &nbsp;மாவட்டக்குழு உறுப்பினர் சின்ன சாமி, வட்டச் செயலாளர் ஆர்.சக்தி வேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் &nbsp;சின்னசாமி, நிர்வாகிகள் சின்னராஜ், சண்முகம், சிலம்பரசன், ராஜாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கிராம மக்களுடன் வட் டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் &nbsp;பேச்சுவார்த்தை மேற்கொண்டார். கோரிக்கைகளை ஏற்று உள்ளூர் &nbsp;நீராதாரமான பொதுக் கிணற்றிலி ருந்து புதிய குழாய் அமைத்து, குடிநீர் &nbsp;வழங்க விரைந்து நடவடிக்கை எடுப் பதாகவும், அதுவரை லாரிகள் மூலம் &nbsp;கிராம மக்களுக்கு தினசரி குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.