அமெ.–இஸ்ரேல் நடவடிக்கையை கம்பத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
1 Mar 2026, 4:03 pm
<p><strong>அமெ.–இஸ்ரேல் நடவடிக்கையை கம்பத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தேனி, மார்ச் 1- ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கம்பம் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கோமேனி உட்பட பலர் உயிரிழந்ததாக கூறப்படும் தாக்குதலுக்கு அமெ ரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளே காரணம் எனக் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஏரியா குழு உறுப்பினர் இம்ரான் கான் தலைமை வகித்தார். கம்பம் ஏரியா செய லாளர் கே.ஆர்.லெனின் கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.மோகன், எஸ்.பன்னீர் வேல், லிங்கேஸ்வரன், எஸ். சஞ்சீவிகுமார் மற்றும் ஏரியா குழு உறுப்பினர்கள் காஜா மைதீன், ரவிக்குமார் உள் ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
