முந்தய பக்கம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்த சிபிஎம் ஆர்ப்பாட்டம்

23 Dec 2025, 4:05 pm
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்த சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்த சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருவள்ளூர், டிச.23- திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் சார்பில் திங்களன்று (டிச.22), திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய அளவிற்கு மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்க வேண்டும், பயிற்சி மருத்து வர்களை கொண்டு சிகிச்சை பார்ப்பதை தடை செய்ய வேண்டும், &nbsp;மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பிணவறையில் உடலை பதப்படுத்தும் நவீன கருவிகளை பொறுத்து வேண்டும், இரவு நேரங்களில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை நியமிக்க வேண்டும், கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த வேண்டும், வளாகத்தில் தரமான கேண்டீன் வசதியை ஏற்படுத்த வேண்டும், எம்ஐஆர் ஸ்கேன் கூடுதலாக அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருவள்ளூர் வட்டச் செயலாளர் எஸ்.கலையரசன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஜி.கண்ணன், ஆர்.தமிழ்அரசு, மாவட்ட குழு உறுப்பினர் என்.கீதா, மூத்த தோழர் கே.செல்வராஜ், வட்ட குழு உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram