முந்தய பக்கம்

அடிப்படை வசதிகள் கேட்டு நவ.23இல் சிபிஎம் போராட்டம்

18 Nov 2025, 3:21 pm
அடிப்படை வசதிகள் கேட்டு நவ.23இல் சிபிஎம் போராட்டம்
<p><strong>அடிப்படை வசதிகள் கேட்டு நவ.23இல் சிபிஎம் போராட்டம்</strong></p> <p>ஈரோடு, நவ.18- ஈரோடு மாநகராட்சிக் குட்பட்ட பகுதியில் குடிநீர் &nbsp;உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து தரக்கோரி நவ.23 ஆம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் அறிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தாலுகாக்குழு உறுப்பினர் பிரபு தலை மையில், தாலுகா செயலாளர் என்.பால சுப்பிரமணி மற்றும் பொதுமக்கள் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் &nbsp;மனு அளித்தனர். அதில், மாநகராட்சிக் குட்பட்ட செங்கோடம்பாளையம் பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். தினக்கூலியான இம்மக்கள், காலை 8 மணிக்கு வேலைக்குச் சென்று &nbsp;மாலை 6 மணிக்கு மேல் தான் வீடு திரும்பு கின்றனர். வேலைக்குச் சென்ற பின்னரே குடி நீர் விநியோகம் நடைபெறுகிறது. எனவே, காலை 6 - 9 மற்றும் மாலை 6 - 9- மணிக்குள் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மேலும், இப்பகுதியிலுள்ள பெண்கள் பொது கழிவறை பழுதடைந்து பல ஆண்டு கள் ஆகிவிட்டது. இதை சரி செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியர், அமைச்சர் முத்து சாமி ஆகியோரிடம் மனு அளித்தும் பய னில்லை. இதனால் பெண்கள் பொது வெளி யில் மலம் கழிக்கும் அவலநிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். மேலும், பாதாள சாக்கடை மற் றும் சமையல் எரிவாயு குழிகள் தோண்டி, &nbsp;அவைகள் பல ஆண்டுகளாக சரிவர மூடா மல் உள்ளது. இதில் குழந்தைகள் மற்றும் முதி யோர்கள் கீழே விழுந்துள்ளனர். எனவே இவற்றை உடனடியாக செப்பனிட வேண் டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.23 &nbsp;ஆம் தேதியன்று ஒப்பாரி போராட்டம் நடத்து வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram