முந்தய பக்கம்

இலவச மனைப் பட்டா கோரி விருத்தாசலத்தில் சிபிஎம் போராட்டம்

18 Dec 2025, 5:31 pm
இலவச மனைப் பட்டா கோரி  விருத்தாசலத்தில் சிபிஎம் போராட்டம்
<p><strong>இலவச மனைப் பட்டா கோரி &nbsp;விருத்தாசலத்தில் சிபிஎம் போராட்டம்</strong></p> <p>விருத்தாச்சலம், டிச.18- விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவ லகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. &nbsp;புலியூர் கிராம மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்குதல், கோ.பூவனூர் கிராமக் குடியிருப்புகளுக்குப் பட்டா வழங்குதல் மற்றும் முகுந்தநல்லூர், சின்ன வடவாடி கிராமங்களில் நில அளவீடு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்கக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் கே.எம். குமரகுரு, நகரச் செயலாளர் என்.ஆர்.ஆர். சங்கரய்யா, மூத்த வழக்கறிஞர் ஆ. சந்திர சேகரன், என்.ஆர்.ஆர். ஜீவானந்தம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி. பெரிய சாமி, கி. செல்வகுமார், எம்.ஜெ. நெல்சன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram