வெனிசுலா நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் அமெரிக்காவின் அடாவடியைக் கண்டித்து இராமநாதபுரத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
9 Jan 2026, 3:41 pm
<p><strong>வெனிசுலா நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் அமெரிக்காவின் அடாவடியைக் கண்டித்து இராமநாதபுரத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>இராமநாதபுரம், ஜன.9- வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளத்தை கொள் ளையடிப்பதற்காக சர்வ தேச சட்டங்களை அப்பட்ட மாக மீறி வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதல் தொடுத்தது. இதில் பலர் கொல்லப் பட்டனர். அமெரிக்காவின் இந்த அடாவடியைக் கண் டித்தும் அந்நாட்டின் இடது சாரி ஜனாதிபதியான நிகோ லஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அராஜகமாக கைது செய்து,நியூயார்க்கில் சிறை வைத்துள்ள அமெ ரிக்க அதிபர் டிரம்ப்பைக் கண்டித்தும் வெனிசுலா வுக்கு ஆதரவு தெரிவித்தும் மதுரோ,அவரது மனை வியை விடுவிக்கக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இராமநாதபுரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகாக்குழு உறுப்பினர் பூமிநாதன் தலை மை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.குருவேல் துவக்க உரையாற்றினார். தாலுகா குழு செயலாளர் என்.வெங்கடேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் நா.கலையரசன், எம்.சிவாஜி, எம்.இராஜ்குமார் ஆகியோர் கண்டன உரை யாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் கே.பி. பெருமாள் நிறைவுரை யாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.செல்வராஜ் நன்றி கூறினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. சந்தானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
