போரூர் கிராமத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
27 Feb 2026, 5:32 pm
<p><strong>போரூர் கிராமத்தில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>விழுப்புரம், பிப்.27- விழுப்புரம் மாவட்டம், காணை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், காணை ஒன்றியம், போரூர் கிராமத்தில் குண்டும், குழியுமாக உள்ள நடுத்தெருவை சிமெண்ட் சாலையாக அமைக்க வேண்டும், குடிநீர் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தாங்கல் ஏரியில் உள்ள கிணறு இடிந்து விழும் நிலையில் உள்ளது, இந்த கிணற்றை புதுப்பிக்க வேண்டும், மேட்டுத்தெருவில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது, புதிய மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை (பிப்.27) காணை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒன்றியக்குழு உறுப்பினர் என்.கிருஷ்ண ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்டி.முருகன், ஒன்றிய செயலாளர் ஏ.ராஜீவ்காந்தி, மாவட்ட குழு பி.சிவராமன், எஸ்.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.தேவநாதன், சி.சடையப்பன், ஆர்.ராம மூர்த்தி, ஏ.நாகராஜ், ஆர்.முதலிவீரன், கே.சாந்தி, ஆர்.பிரேமா, கே.செல்லபாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
