முந்தய பக்கம்

அடிப்படை வசதி செய்யக்கோரி நெய்வேலியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

28 Nov 2025, 2:28 pm
அடிப்படை வசதி செய்யக்கோரி நெய்வேலியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>அடிப்படை வசதி செய்யக்கோரி நெய்வேலியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>கடலூர், நவ.28- &nbsp;வடக்குத்து - இந்திரா நகர் பகுதி களுக்கான அடிப்படை வசதிகள் செய்யக்கோரி நெய்வேலி ஆர்ச்கேட் எதிரில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர குழு உறுப்பினர் கே. மணி தலைமை &nbsp;தாங்கினார். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட குழு உறுப்பினர் எம். சீனிவாசன், நகர செயலாளர் ஆர்.பாலமுருகன், குடியிருப்போர் அமைப்பைச் சார்ந்த ஏ.வேல்முருகன், ஜி.குப்புசாமி, &nbsp;வி.முத்து வேல், டி.ஜெயராமன், போக்குவரத்து சங்க தலைவர் ராமமூர்த்தி, நெய்வேலி குடியிருப்போர் அமைப்பு பொருளாளர் &nbsp;பி.மணிமாறன், கிளை செயலாளர் நாகலிங்கம்ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். முறையான குடிநீர் விநியோகம், சாலைகளில் மின் விளக்குகளை பராமரித்தல்,சாலைகள் சீரமைப்பு, பூங்காக்களை பராமரித்தல், துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்படுத்துதல், ஆக்கிரமிப்பில் இருந்து நகரை பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram