பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
13 Nov 2025, 3:30 pm
<p><strong>பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>அருப்புக்கோட்டை, நவ.13- அருப்புக்கோட்டையில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். உயர்த்தப்பட்ட சொத்து வரியை நகராட்சி நிர்வாகம் உடனடியாக குறைக்க வேண்டும். மலை யரசன் கோவில் கிழக்குப் பகுதியில் உள்ள கண்மாய் ஆக்கிரமிப்பு, பாவடித் தோப்பு அருகிலுள்ள நீர்வழி ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருநகரத்தில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு கிளைச் செயலாளர் கே.கந்தசாமி தலைமையேற் றார். நகர்மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து மூத்த தலை வர் எஸ்.காத்தமுத்து பேசி னார். கோரிக்கைகளை விள க்கி நகரச் செயலாளர் எம். பரமதயாளன் உரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.முருகன் கண்டன உரையாற்றினார். சிஐடியு கன்வீனர் பி.அன் புச்செல்வன், வேலுமயில் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.</p>
<p> </p>
