அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
10 Dec 2025, 4:08 pm
<p><strong>அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தருமபுரி, டிச.10- அரூர், அம்பேத்கர் நகர் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் பேருந்து நிலையத்திலிருந்து அம் பேத்கர் நகர் வரை சாலையை சீர மைக்க வேண்டும். அம்பேத்கர் நகர் முழுவதும் கழிவுநீர் கால்வாய் கள் அமைக்க வேண்டும். முன்னாள் எம்எல்ஏ பி.டில்லியாபு தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், சமையற்கூடம் மற்றும் கழிப்பிட வசதிகள் மேம்ப டுத்தி செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். நரசனேரி ஆக்கிர மிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டு வளர்ச்சித்து றைக்கு சொந்தமான இடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண் டும். புதுக்காலனி குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் நீரேற் றம் செய்து அனைத்து தெருக்களுக் கும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். அரூர் அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் எலும்பு முறிவு மருத்துவர்கள், ஸ்கேன் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதிப்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, கட்சியின் கிளைச் செயலா ளர் எஸ்.கொடுமுடி தலைமை வகித் தார். இதில் மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.கோவிந் தன், எஸ்.தனலட்சுமி, சி.பழனி, வி. ஜெயகாந்தன், டி.ஜடையான்டி உட் பட பலர் கலந்து கொண்டனர்.</p>
