மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
23 Feb 2026, 5:35 pm
<p><strong>மருத்துவமனையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>சேலம், பிப்.23- மேட்டூர் அரசு மருத்துவ மனையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மேட் டூர் அரசு மருத்துவமனையில் உட்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும். போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் நியமித்து, பொதுமக்களை அலைக்கழிக்கக்கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்க ளன்று மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஒன்றியச் செயலாளர் எஸ்.வசந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற் குழு என்.பிரவீன்குமார், ஒன்றியக்குழு உறுப் பினர்கள் எம்.வெற்றிவேல், வி.ஸ்டாலின், ஆர்.அண்ணாதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடி வில், கோட்டாட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.</p>
