தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நத்தமாக வகை மாற்றம் செய்து குடிமனை பட்டா வழங்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

30 Dec 2025, 5:57 pm
நத்தமாக வகை மாற்றம் செய்து குடிமனை பட்டா வழங்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>நத்தமாக வகை மாற்றம் செய்து குடிமனை பட்டா வழங்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>நாமக்கல், டிச.30- பல வருடங்களாக அரசு புறம் போக்கு நிலத்தில் வீடு கட்டி குடி யிருந்து வரும் மக்களுக்கு நத்த மாக வகை மாற்றம் செய்து குடி மனை பட்டா வழங்கக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மூலக்குறிச்சி ஊராட்சி காமராஜர் நகர் பகுதியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களை சார்ந்த பல்வேறு சமூக பொதுமக்கள் அரசு புறம் போக்கு நிலத்தில் சுமார் 30 லிருந்து &nbsp;50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். &nbsp;குறிப்பாக ராசிபுரம் வட்டம் முள் ளுக்குறிச்சி குறுவட்டம் மூலக் குறிச்சி கிராமத்தில் சர்வே எண்க ளில் அரசு புறம்போக்கு நிலத்தில் &nbsp;மக்கள் வீடு கட்டி குடியிருந்து வரு கின்றனர். மேற்படி நிலத்தில் குடி யிருந்து வரக்கூடிய பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வழங்க வலியு றுத்தி பல்வேறு கட்ட போராட்டங் கள் நடத்தப்பட்டது. ஆனால் இது வரை நிலத்தை நத்தமாக வகை மாற் றம் செய்து குடிமனை பட்டா வழங்க வில்லை. இதனால் பொதுமக்கள் மிகப் பெரிய இன்னலுக்கும், மன உளைச் சலுக்கும் உள்ளாகி செய்வதறியா மல் தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் ஆகிய இப்பிரச்சனையில் தலை யிட்டு, மூலகுறிச்சி ஊராட்சி, காம ராஜர் நகரில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நத்தமாக வகைமாற்றம் செய்து குடிமனை பட்டா வழங்கிட வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமகிரிப் பேட்டை ஒன்றியக்குழு சார்பில் திங் களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமகிரிப் பேட்டை ஒன்றியச் செயலாளர் வி. பி.சபாபதி தலைமை வகித்தார். காமராஜர் நகர் பகுதியை சார்ந்த முருகேசன், சந்திரசேகர், சேகர் &nbsp;ஆகியோர் முன்னிலை வகித்தனர். &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. டி.கண்ணன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் சி.துரைசாமி, பி.செல்வ ராஜ், எஸ்.நர்மதா தேவி உள்ளிட் டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர் வாகிகள் மற்றும் ஊர் பொது மக்க ளின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சி யர் துர்கா மூர்த்தி மற்றும் மாவட்ட &nbsp;வருவாய் அலுவலர் சரவணன் ஆகி யோரிடம் கோரிக்கை மனு அளித்து &nbsp;பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். &nbsp;பேச்சுவார்த்தையில் விரைந்து பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்ப தாக அரசு அதிகாரிகள் உறுதிய ளித்ததின் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.