தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விரல் துண்டிக்கப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு இழப்பீடு வழங்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

19 Dec 2025, 6:05 pm
விரல் துண்டிக்கப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு இழப்பீடு வழங்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>விரல் துண்டிக்கப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு இழப்பீடு வழங்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>உடுமலை, டிச.19 - உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சின்னவீ ரம்பட்டி ஊராட்சியில், தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருபவர் மரகதம் (42). கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் &nbsp;தேதி வழக்கம் போல குப்பைகளை சேகரிக்கும் பணி செய்து &nbsp;கொண்டிருந்தார். குப்பையை இரும்பு தொட்டியில் கொட்டி யபோது, பழுதடைந்த நிலையில் இருந்த அதன் மூடி கழன்று &nbsp;அவரின் கைகளில் விழுந்தது. இதில் அவரின் இரண்டு விரல் கள் துண்டானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் போது, அவரது கைவிரல் நரம்புகள் கடும் சேதமடைந்தி ருப்பதால், துண்டான விரல்களை இணைக்க முடியாது என &nbsp;மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட தொழி லாளிக்கு இதுவரை, ஊராட்சி நிர்வாகம் சார்பில், மருத்துவ &nbsp;உதவியோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை. எனவே, &nbsp;கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு &nbsp;செய்து, பாதிக்கப்பட்ட பணியாளருக்கு உரிய இழப்பீடு &nbsp;வழங்க வேண்டும், மேலும் குப்பை தொட்டிகளை உரிய காலத் தில் ஆய்வு செய்யாத ஊராட்சி செயலாளர் மற்றும் வட்டார &nbsp;வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று &nbsp;ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் ஏரிப்பாளையம் கிளை செயலாளர் ராஜன் தலைமை &nbsp;ஏற்றார். உடுமலை நகரச்செயலாளர் தண்டபாணி முன்னி லையில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜ் பேசினார். &nbsp;கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், உடுமலை &nbsp;நகரக்கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் &nbsp;கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.