பட்டியலின மக்களுக்கு மயானம் கேட்டு சிபிஎம் போராட்டம்
4 Dec 2025, 3:52 pm
<p><strong>பட்டியலின மக்களுக்கு மயானம் கேட்டு சிபிஎம் போராட்டம்</strong></p>
<p>நாமக்கல், டிச.4- வீட்டு மனை பட்டா மற்றும் பட்டியலின மக்களுக்கு மயானம் கேட்டு குமாரபாளையம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் அடுத்துள்ள பல்லக் காபாளையம், தட்டாங்குட்டை, நேரு நகர், கோட்டைமேடு, வெப் படை, காந்திநகர், வாய்க்கால் மேடு, சின்னார் பாளையம், படை வீடு, அம்மாசி பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் சொந்த வீடு, நிலம் இல்லாத 256 குடும்பங்களை சேர்ந்த விவசாய மற்றும் விசைத் தறி தொழிலாளர்கள் வீட்டு மனை கேட்டு பலகட்ட போராட்டம் நடத்தி யும், பல ஆண்டுகள் ஆகியும் வீட்டு மனை வழங்கப்படாத நிலை உள் ளது. இந்த மக்கள் கடந்த எட்டு ஆண்டுகளாகவே வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பம் கொடுத்து உள்ளனர். எனவே வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்த மக்க ளுக்கு உடனே வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க வேண்டும். இந்திய சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகியும், படைவீடு உப்பு பாளையம் பட்டியலின மக்க ளுக்கு சொந்த மயானம் இல்லாத நிலை உள்ளது. ஏற்கனவே உள்ள மயானம் நீதிமன்ற வழக்கில் உள் ளது. இதன் காரணமாக அந்த மயா னத்தையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் பட்டிய லின மக்களுக்கு சொந்த மயானத் தை உறுதிப்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் குமாரபாளை யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் வடக்கு ஒன்றியச் செய லாளர் ஆர்.சந்திரமதி இந்த போராட் டத்திற்கு தலைமை வகித்தார். போராட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எ.ரங்கசாமி, எம்.அசோகன், எம்.ஆர்.முருகே சன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.துரைசாமி, என்.சக்திவேல், குமா ரபாளையம் நகரக் குழு செயலா ளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் பேசி னர். காலை துவங்கி மாலை வரை இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்ற நிலையில், குமார பாளையம் வட்டாட்சியர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குமாரபாளையம் வட்டத்தில் பல்வேறு பகுதியில் வசிக்கும் வீடோ நிலமோ இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்லக் காபாளையம் கிராமத்தில் தரிசு கல் லாங்குத்து புறம்போக்கு நிலத் தினை நத்தமாக, வகைப்பாடு மாறு தல் செய்து பட்டா வழங்கிட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் மொழிவுகள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் இருந்து உரிய அனு மதி பெறப்பட்ட பிறகு வீட்டுனை பட்டா வழங்கப்படும். மேலும் பட்டியலின மக்க ளுக்கு மயானம் குறித்தான பிரச் சனையில் உரிய தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 2026 ஜனவரி 20-ஆம் தேதிக்குள் மேற் கண்ட கோரிக்கைகளை நிறைவேற் றித் தரும் வகையில் உரிய நடவடிக் கைகள் எடுக்கப்படும் என அதிகாரி கள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட போராட்டக்காரர்கள் தற்காலிக மாக போராட்டத்தை ஒத்தி வைத்த னர். இந்த காத்திருப்புப்போராட்டத் தில் கட்சி ஒன்றியக்கமிட்டி உறுப்பி னர்கள், கட்சி கிளைச்செயலாளர் கள், விவசாய சங்க நிர்வாகிகள், விசைத்தறி விவசாய சங்க தொழி லாளர்கள் என நூற்றுக்கணக்கா னோர் பங்கேற்றனர்.</p>
