தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்கா-இஸ்ரேலை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

13 Mar 2026, 4:52 pm
அமெரிக்கா-இஸ்ரேலை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து  சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>அமெரிக்கா-இஸ்ரேலை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து &nbsp;சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, மார்ச் 13- &nbsp;அமெரிக்க ஏகாதிபத்திய அராஜகத்தை கண்டிக்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், கடுமையான பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலக்கரை பகுதி குழு சார்பில், விறகு அடுப்பு வைத்து, இரு சக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து சங்கிலியாண்டபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், பகுதிச் செயலாளர் சுரேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். &nbsp;இதில் பகுதிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பகுதிக்குழு உறுப்பினர் இரட்டைமலை நன்றி கூறினார். &nbsp;கும்பகோணம் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நாச்சியார்கோவில் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டக் குழு உறுப்பினர் பழனிவேல் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வெங்கடேசன் தருமையன் மற்றும் விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் முருகன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் பிரேமநாத், சிலம்பரசன், மாதர் சங்க பொறுப்பாளர் லதா உள்ளிட்டோர் கண்டன முழக்கமிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.