தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

11 Jan 2026, 2:59 pm
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கண்டித்து  சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கண்டித்து &nbsp;சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>நாகப்பட்டினம், ஜன.11- &nbsp;வெனிசுலா அதிபர் மதுரோவையும், அவரது துணைவியாரையும் நாடு புகுந்து நள்ளிரவில் கைது செய்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை கண்டித்து நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேதை தெற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் வி. அம்பிகாபதி தலைமையில் ஆயக்காரன்புலம் கடைத்தெருவிலும், ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ. வெற்றியழகன் தலைமையில் மருதூர் தெற்கு கடைத்தெருவிலும், ஒன்றியக்குழு உறுப்பினர் வி. இளைய பெருமாள் தலைமையில் தாணிக்கோட்டகம் கடைத்தெருவிலும், விச. ஒன்றியச் செயலாளர் பி.எஸ். பன்னிர்ச்செல்வம் தலைமையில் வாய்மேடு கடைத்தெருவிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். &nbsp;அரியலூர் &nbsp;அரியலூர் அண்ணாசிலை அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் &nbsp;சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலக் குழுஉறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி, சிற்றம்பலம், கே.கிருஷ்ணன் உள்ளிட்டோர் முழக்கமிட்டனர். &nbsp;அறந்தாங்கி &nbsp;புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் எல். அலாவுதீன் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் நாராயணமூர்த்தி, எம். கலந்தர் என். காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாட்ட செயற்குழு உறுப்பினர் கவிவர்மன், நகரக் குழு ஆர். கர்ணா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், தென்றல் கருப்பையா, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்ணனி கவிபாலா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.