தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்க அரசின் அடாவடியை கண்டித்து சிபிஎம் போராட்டம்

10 Jan 2026, 2:48 pm
அமெரிக்க அரசின் அடாவடியை கண்டித்து சிபிஎம் போராட்டம்
<p><strong>அமெரிக்க அரசின் அடாவடியை கண்டித்து சிபிஎம் போராட்டம்</strong></p> <p>நாகப்பட்டினம், ஜன.10- &nbsp;ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அமெரிக்க அரசை கண்டித்து, அதிபர் டிரம்ப் உருவ பொம்மையை எரித்து சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகப்பட்டினம், அவுரித்திடலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அருள்தாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதிபாசு, பொருளாளர் பிரகாஷ், இந்திய மாணவர் சங்க செயலாளர் முகேஷ் கண்ணா, இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் சிவன் அருள் செல்வன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அ.தி. அன்பழகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலாளர் பகத்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகரச் செயலாளர் வெங்கடேசன் நன்றி உரையாற்றினார். &nbsp;நாகை வடக்கு ஒன்றியம் ஆழியூர் மற்றும் தேமங்கலம் கட்சி கிளை இணைந்து, ஆழியூர் பேருந்து நிறுத்தத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.வி. ராஜா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகையன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.கே. குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் வி.கே. முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.கே. மார்க்ஸ், தேமங்கலம் ஆழியூர் கட்சி கிளை செயலாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். &nbsp;நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் கடைவீதியில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து பங்கேற்றார். &nbsp;நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் மேற்கு ஒன்றியம், &nbsp;பெரியத்தும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில், கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் டி. தமிழ்மாறன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.டி. சுதாகர் வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் என்.பி. கண்மணி, மாதர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். புனிதா, கட்சியின் கிளைச் செயலாளர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.