முறைகேடாக பத்திரப்பதிவு செய்தவர்களுக்கு துணை போகும் வருவாய்த்துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
9 Dec 2025, 4:25 pm
<p><strong>முறைகேடாக பத்திரப்பதிவு செய்தவர்களுக்கு துணை போகும் வருவாய்த்துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்'</strong></p>
<p><br />
தருமபுரி, டிச.9- அனுபவ நிலத்தில் உள்ளவர்களுக்கு எதிராகவும், முறைகேடாக பத்திரப்பதிவு செய்தவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் பாலக்கோடு வருவாய்துறை அதிகாரிகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஏர்ரனஅள்ளி ஊராட்சியில் சர்வே எண்: 340/346/347 இல் நிலம் சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கோட்டாட்சியர் இதைப்பற்றி விசாரிக்க கூறிய பிறகும், பாலக்கோடு வட்டாட்சியர் எதையும் விசாரிக்காமல் ஆள் மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்தவர்களுக்கு ஒரு தலைப்பட்சமாக நிலத்தை அளவீடு செய்யும் பணியில் இறங்கியுள்ளார். இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நிலம் சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கும் பொழுது, வட்டாட்சியர் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. பாலக்கோடு பகுதியில் தொடர்ச்சியாக வருவாய்துறை அதிகாரிகள் அனுபவ நிலத்தில் உள்ளவர்களுக்கு எதிராகவும், முறைகேடாக பத்திரப்பதிவு செய்தவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நிலம் அளவீடு செய்யும் பொழுது சட்ட விதிகளை வருவாய்த்துறையினர் முறையாக பின்பற்ற வேண்டும். குத்தகை நிலம், அனுபவ நிலத்தில் விவசாயிகள் வாழ்ந்து வரும் போது, அதிகாரிகள் ரவுடிகளை வைத்து மிரட்டி, அவர்களை வெளியேற்றுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்து, எம்.மாரிமுத்து, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பி.கோவிந்தசாமி, சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், சி.முருகன், ஜி.பாண்டியம்மாள், ராஜா, கே.எம்.முருகேசன், ஜி.நக்கீரன் உட்பட கலந்து கொண்டனர்.</p>
