பூங்காவில் கட்டணக் கொள்ளை: சிபிஎம் ஆர்ப்பாட்டம்
19 Feb 2026, 3:09 pm
<p><strong>பூங்காவில் கட்டணக் கொள்ளை: சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>சேலம், பிப்.19- பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் கட் டணக் கொள்ளையை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாநகராட்சி, 25 ஆவது கோட்டத்திற்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் உள்ள ஏரியை மக்கள் வரிப்பணம் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பூங்காவாக மாற்றி மக்கள் பயன்படுத்தும் வகையில் குழந்தைகள் விளையாடுவதற் கான உபகரணங்கள் உள்ளிட்ட வைகள் உருவாக்கப்பட்டது. இப் பகுதியில் உள்ள மக்கள் காலை மாலை நடைபயிற்சி மேற்கொள் ளும் வகையில் பூங்காவை சுற்றி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரிக்கா மலும், போதிய பாதுகாவலர்களை நியமிக்காமலும் இருப்பதால், இது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. தற்போது மாநக ராட்சி நிர்வாகம் பூங்காவை பராம ரிக்காமல் தனியாருக்கு பராமரிப் பதற்காக விட்டுள்ளது. தற்போது தனியார் நிர்வாகம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பள்ளப்பட்டி ஏரி பூங்காவை வாகன கட்டணம் ரூ.20, நுழைவு கட்டணம் ரூ.10, விளையாட்டு உபகரண கட்டணங் கள் தனி என வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளப்பட்டி ஏரி பூங்கா மாநகரின் மையப் பகுதி யில் இருப்பதால் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதாக வும், இதனை பயன்படுத்தி தனியார் அமைப்பினர் கட்டண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சேலம் மாநகரில் உள்ள மாநக ராட்சி பொது இடங்கள் அனைத்தும் தற்போது தனியாருக்கு விடப்பட்டு வருகிறது. எனவே சேலம் மாநக ராட்சிக்கு சொந்தமான அனைத்து பகுதிகளையும் மாநகராட்சி நிர் வாகமே ஏற்று நடத்த வேண்டும். உரிய பராமரிப்பு மற்றும் பாது காப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் வியாழனன்று பள்ளப்பட்டி ஏரி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் வடக்கு மாநகர செயலா ளர் என்.பிரவீன் குமார் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஏ. ராமமூர்த்தி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே.ராஜாத்தி, எம்.கனகராஜ், மேற்கு மாநகர செய லாளர் பி. கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.வெங்கடேஷ், பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
