காரைக்குடி வட்டாட்சியரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
3 Feb 2026, 4:00 pm
<p><strong>காரைக்குடி வட்டாட்சியரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>சிவகங்கை, பிப்.3- சிவகங்கை மாவட்டம் காரைக் குடி வட்டாட்சியரின் அலட்சிய போக்கையும் அவமதிப்பு செய லையும் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ் வாயன்று காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரைக்குடி தாலுகா செயலாளர் அழகர்சாமி தலைமை தாங்கி னார். காரைக்குடி வட்டம், கண்ட னூர் பேரூராட்சி, பாலையூர் ஜீவா நகரில் நடைபாதையில் மேற் கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என, கடந்த 2 ஆண்டுகளாக பலமுறை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கினார். அதனைத் தொடர்ந்து, காரைக்குடி வட்டாட்சியர் நடவ டிக்கை எடுக்காததால், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. இதனை விசாரித்த நீதி மன்றம், சட்டப்படியான நடவ டிக்கைகள் மூலம் ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என உத்தர விட்டுள்ளது. இந்த நிலையில், 8.1.2026 அன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்குடி தாலுகா செயலாளர் கே.ஆர்.அழகர்சாமி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.சுப்பிரமணியன் ஆகியோர், காரைக்குடி வட்டாட்சியரை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அப்போது, வட் டாட்சியர் அவமதித்தும், மரியாதை யற்ற முறையிலும் பேசியுள்ளார். இதனை கண்டித்து காரைக்குடி தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் உறுப்பினர்கள் எம்.தட்சிணா மூர்த்தி, எஸ். வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.சுப்பிர மணியன், திருப்பத்தூர் தாலுகா செயலாளர் எஸ்.முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுகம், ஏ.சேதுராமன், கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி னர். நிறைவாக, மாவட்டச் செய லாளர் ஏ.ஆர்.மோகன் பேசினார்.</p>
