முந்தய பக்கம்

மாமேதை மார்க்ஸ் குறித்து அவதூறு ஆளுநரைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

28 Nov 2025, 2:28 pm
மாமேதை மார்க்ஸ் குறித்து அவதூறு ஆளுநரைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>மாமேதை மார்க்ஸ் குறித்து அவதூறு ஆளுநரைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>நாமக்கல், நவ. 28- காரல் மார்க்ஸ் பற்றி அவதூறாக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, தன்னுடைய பதவிக்கான கண்ணியத்தை விட்டொழித்து, தனது உண்மையான ஆர்எஸ்எஸ் முகத்தை காட்டி வருகிறார். &nbsp;அண்மையில், புத்தக விழாவில் மனிதகுல மாமேதை காரல் மார்க்ஸ் பற்றியும், மார்க்சியத்தைப் பற்றியும் உண்மைக்கு புறம்பாக பேசினார். இதற்கெதிராக தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் வலுத்து வருகிறது. இதன்ஒருபகுதியாக, தமிழகத்தில் ஆளுநர் ரவியை மாற்றம் செய்ய வேண்டும், உண்மைக்கு புறம்பாக பேசிய கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.கிட்டுசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, சுரேஷ், மேற்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தேவராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் கவிதா, முன்னாள் ஒன்றியச் செயலாளர் பி.சுரேஷ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram