நன்னிலம் ஒன்றியத்தில் கலவரத்தை தூண்டும் பாஜக குண்டர்களை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
18 Dec 2025, 4:38 pm
<p><strong>நன்னிலம் ஒன்றியத்தில் கலவரத்தை தூண்டும் பாஜக குண்டர்களை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருவாரூர், டிச.18- மக்கள் ஒற்றுமைக்காகக் குரல் கொடுக்கும் சிபிஎம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி பதிவிட்டு, பேரளம் பகுதியில் கலவரத்தை தூண்டும் பாஜக கும்பலைக் கண்டித்து, பேரளம் கடைவீதியில் நன்னிலம் சிபிஎம் நகரம், ஒன்றிய கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த் தலைமை வகித்தார், மாவட்டக் குழு உறுப்பினர் ஐ.முகமது உதுமான், நகரச் செயலாளர் ஜி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு கண்டன உரையாற்றி பேசினார். மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி, டி. வீரபாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் கே. தமிழ்ச்செல்வி, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.எம். பாலா மற்றும் ஒன்றிய, நகரக் குழு, வர்க்க வெகுஜன அமைப்பின் நிர்வாகிகள், தோழர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை சமூக ஊடங்களில் அவதூறு பரப்பிய பாஜக-வைக் கண்டித்து முழக்கமிட்டனர்.</p>
