தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருத்துவமனையின் அலட்சியம்: அதிகாரிகள் நடவடிக்கையால் சிபிஎம் போராட்டம் வாபஸ்

2 Jun 2026, 10:16 pm
மருத்துவமனையின் அலட்சியம்: அதிகாரிகள் நடவடிக்கையால் சிபிஎம் போராட்டம் வாபஸ்

மருத்துவமனையின் அலட்சியம்: அதிகாரிகள் நடவடிக்கையால் சிபிஎம் போராட்டம் வாபஸ்

நாமக்கல், ஜூன் 2- எலச்சிபாளையம் ஒன்றியத் திற்குட்பட்ட மாணிக்கம்பாளையம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வில்லை எனக்கூறி மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்த போராட்டம், அதி காரிகள் நடத்திய சமரச பேச்சுவார்த்தையால் திரும்பப் பெறப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அருகே உள்ள எலச்சி பாளையத்தை சேர்ந்த சிறுவன், கடந்த சனியன்று நாமக்கல்லில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அன்றைய தினம் நள்ளிரவு 12 மணியளவில் பெற்றோர் சிறுவனை மாணிக்கம் பாளையம் அரசு மருத்துவம னைக்கு அழைத்து சென்றபோது, அங்கிருந்த மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் அலைக் கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வா யன்று மருத்துவமனை முன்பு ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என அறி விக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வேலகவுண்டம்பட்டி காவல் நிலை யத்தில் காவல் ஆய்வாளர் தேவி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா முன் னிலையில் அமைதி பேச்சு வார்த்தை செவ்வாயன்று நடை பெற்றது. அப்போது, சம்பந்தப் பட்ட மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட் டது. மேலும், சிறுவனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கான காரணம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

எழுத்துப்பூர்வமாக மேற் கொள்ளப்பட்ட உடன்பாட்டில், மருத்துவமனையில் அனைவருக் கும் உரிய சிகிச்சை வழங்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட உணவு நிறுவனம் மற்றும் ஊழியர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தை திரும்ப்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மற்றும் பொது மக்கள், உடனடி நடவடிக்கை எடுத்த மருத்துவம், காவல்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரி வித்தனர்.

முன்னதாக, இந்த பேச்சு வார்த்தையில், துணை காவல் கண் காணிப்பாளர் தையல்நாயகி, வட் டார மருத்துவர் கருணாகரன், உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.ரமேஷ், வீ.தேவராஜன், மூத்த தோழர்கள் பி.சுரேஷ், கே.எஸ்.வெங்கடாசலம், வழக்கறிஞர் கெ. செ.செந்தில்குமார், காங்கிரஸ் கட்சி ஆர்.தங்கராசு, தமிழ் புலிகள் கட்சி செந்தமிழன், லத்துவாடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பூசன், கல்குவாரி எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.