மேற்கு வங்கத்தில் பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து சிபிஎம் மாபெரும் போராட்டம்
18 Jun 2026, 9:02 pm
<p><strong>மேற்கு வங்கத்தில் பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து சிபிஎம் மாபெரும் போராட்டம்</strong></p><p>பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பரில் உள்ள மாவட்ட அலுவலகத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி போராட்டம் பொதுக்கூட்டத்துடன் நடைபெற்றது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மேற்கு வங்க மாநிலச் செயலாளருமான முகமது சலீம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்ட பேரணியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.</p>
