தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் தவிப்பு சிபிஎம் தலைமையில் போராட்டம்

21 Jul 2026, 10:45 pm
குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் தவிப்பு  சிபிஎம் தலைமையில் போராட்டம்
<p><strong>குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் தவிப்பு சிபிஎம் தலைமையில் போராட்டம்</strong></p><p>நாமக்கல், ஜூலை 21- மல்லசமுத்திரம் ஒன்றி யம் மரப்பறை ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்க ளுடன் ஊராட்சி மன்ற அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், மரப்பறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தினசரி தேவைக்கான குடி நீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள் ளது. மேலும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி களை சுத்தம் செய்யாமல் குடிநீர் விநியோ கம் செய்வதால் குடிநீரில் புழுக்கள் வருகி றது. இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், செவ்வாயன்று பொதுமக் கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பழனியம் மாள் தலைமையில் காலிக்குடங்களுடன் மரப்பறை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சு.சுரேஷ், கிளைச் செயலாளர் ஜி.சாந்தி, மாதர் சங்க ஒன்றியத் தலைவர் வி.பிரியா, மோட்டார் சங்க நிர்வாகி ஜி.கோவிந்தராஜ், கட்டுமான சங்க நிர்வாகி கே.குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மல்ல சமுத்திரம் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் வெங்கடாசலம், ஊராட்சி செயலாளர் ராஜா மற்றும் காவல் உதவி ஆய்வாளர் வரத ராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, முறையாக குடிநீர் விநியோ கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஈரோடு இதேபோன்று, ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளை யம் ஊராட்சியில், பழைய ஊராட்சி அலுவ லக வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த இரு வாரங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்துக்கு புகார ளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் கால்நடை மருத்துவமனை பிரிவில், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல் ஆய்வாளர் விநாயகம், ஊராட்சி செய லாளர் செல்வி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, உடனடி யாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை யேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.