முந்தய பக்கம்

சிபிஎம் போராட்ட எதிரொலி: எம்எல்ஏ, எம்.பி., ஆய்வு

14 Jul 2026, 10:36 pm
சிபிஎம் போராட்ட எதிரொலி: எம்எல்ஏ, எம்.பி., ஆய்வு
<p><strong>சிபிஎம் போராட்ட எதிரொலி: எம்எல்ஏ, எம்.பி., ஆய்வு</strong></p><p>உடுமலை, ஜூலை 14- குடிமங்கலம் ஒன்றியத்தில் நிலவி வந்த கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, நாடாளு மன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் செவ் வாயன்று அதிகாரிகளுடன் அவசர ஆய்வு மேற்கொண்டனர். குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, திங்களன்று அணிக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சி முற்றுகையிட்டது. குழாய் உடைப்புகளை சீரமைத்து குடிநீர் வழங்க ஒரு வார காலம் அவகாசம் வேண்டும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இப் போராட்டத்தின் எதிரொலியாக, செவ்வா யன்று பெதப்பம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, உடுமலை சட்ட மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுடன் அவசர ஆய்வு நடத்தினர். அனைத்து ஊராட்சிகளுக்கும் தடையின்றி குடிநீர் வழங்க விரைந்து நடவ டிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி னர். எங்கள் பகுதி குடிநீர் தட்டுப்பாட்டை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை; மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்திற்கு பிறகே இந்த அவசர ஆய்வு நடந்துள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram