முந்தய பக்கம்

மனைப் பட்டா மற்றும் மாற்று இடம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் போராட்டம்

26 Jun 2026, 12:41 am
மனைப் பட்டா மற்றும் மாற்று இடம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் போராட்டம்
<p><strong>மனைப் பட்டா மற்றும் மாற்று இடம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் போராட்டம்</strong></p><p>கடலூர், ஜூன் 25- கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், நந்தபடி முதல் துறையூர் வரையிலான நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக 39 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் மற்றும் மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் ஏ.அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ், கமாபுரம் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செந்தில், செல்வகுமார் மற்றும் கிளைச் செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கோட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தங்களுக்குப் பாதுகாப்பான மாற்று இடமும், சட்டப்பூர்வமான பட்டாவும் வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram