தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை விழுப்புரம் மாவட்டத்தில் 15 சிபிஎம் கிளைகள் போராட்டம்

30 Oct 2026, 11:48 pm
கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை விழுப்புரம் மாவட்டத்தில் 15 சிபிஎம் கிளைகள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை விழுப்புரம் மாவட்டத்தில் 15 சிபிஎம் கிளைகள் போராட்டம்

விழுப்புரம், அக்.30-திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட 15- கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், திரு வெண்ணெய்நல்லூர் வட்டத்தில் உள்ள காரப்பட்டு - 1, காரப்பட்டு - 2, இருவேல்பட்டு, காந்தலவாடி, சிறுவானூர், தடுத்தாட்கொண்டூர், மழையம்பட்டு, சரவணப்பாக்கம், ஆமூர் -1, ஆமூர் -2, மண்டக மேடு, முத்தியால்பேட்டை, அருக் குறுக்கை, அ.புதூர், ஆனத்தூர் ஆகிய 15 கிளைகளின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து தங்கள் கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சி

யர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். வட்டச் செயலாளர் கே.சிவக்குமார் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், விழுப்புரம் மாவட்டச் செய லாளர் என்.சுப்பிரமணியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2024-ஆம் ஆண்டு மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மலட்டாற்றுப் பாலத்தை

உடனடியாக அகற்றிவிட்டு உறுதி யான புதிய பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும். எல்லைக் கண்ணாறு சாலையில் சிமெண்ட் சாலை அமைத்து சைடு வாய்க்கால் அமைத்து தர வேண்டும். ரேஷன் கடை அனைத்து வேலை நாட்களிலும் முழுமையாக திறந்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு மனைப்பட்டா இல்லாத அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்கி, வெற்றி வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்கிட வேண்டும்.

காரப்பட்டு தலித் குடியிருப்பு களுக்கு பொதுக் கழிப்பிடம், சமுதாயக் கூடம்,தனி ரேஷன் கடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கிராம மக்களின் அடிப்படை வசதி

களை செய்து கொடுக்க வேண்டும்

என்று போராட்டத்தில் வலியுறுத்திப் பேசினர்.

இதில், வட்டக்குழு உறுப்பி னர்கள் பி.பழனி, ஆர்.பால கிருஷ்ணன், வி.கோவிந்தராஜ், என்.தட்சணாமூர்த்தி,கே.அண்ணா மலை, டி.மணிகண்டன், கே.தேவேந்திரன், விச வட்டத் தலை வர் பி.தங்கவேல் உட்பட 350க்கும் மேற்பட்டோர் செங்கொடியுடன் பங்கேற்றனர். போலீஸ் தடையையும் மீறி திருவெண்ணெய் நல்லூர் வட்டாட்சியர் அலுவல கத்தின் உள்ளே வராண்டாவில்தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.