விலைவாசி உயர்வை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
19 Jun 2026, 11:53 pm

விலைவாசி உயர்வை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், ஜூன் 19- மத்திய பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கண்டித்தும், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும், விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் மற்றும் கண்டாச்சிபுரம் ஆகிய மூன்று இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் (ஜூன் 19) கண்டன ஆர்ப்பாட் டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி.ராதாகிருஷ்ணன், ஏ.சங்கரன், எஸ்.முத்துகுமரன், ஆர்.மூர்த்தி, ஆர்.டி.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

முக்கிய கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள், “தொழிலாளர்களை அடிமையாக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதையும், அந்தத் திட்டத்தைச் சிதைக்கும் முயற்சிகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும், தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

திண்டிவனம்

திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டச் செயலாளர் ஏ.கண்ணதாசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.ராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கீதா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன், சே.அறிவழகன் மற்றும் இடைக்குழு செயலாளர்கள் எஸ்.பாலமுருகன் (வானூர்), கெஜ மூர்த்தி (மயிலம்), ஹரிஹர குமார் (மேல்மலையனூர்), ஆர்.உலகநாதன் (மரக்காணம்), டபிள்யூ.ஆல்பர்ட் வேளாங்கண்ணி (செஞ்சி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கண்டாச்சிபுரம்

கண்டாச்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டச் செயலாளர் எஸ்.கணபதி தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துகுமரன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.முத்துவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.