தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விழுப்புரத்தில் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு காவல்துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

17 hours before
விழுப்புரத்தில் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு காவல்துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு காவல்துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், நவ.23-கொள்ளை, பாலியல் குற்றங்களால் விழுப்புரத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று கூறி காவல்துறையைக் கண்டித்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் ஆர்.கண்ணப்பன் தலைமை தாங்கினார்.

சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன் ஆகியோர் விழுப்புரத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை கண்டித்துப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பிரகாஷ், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜீவானந்தம்,தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாவட்ட தலைவர் ஜி.ஜெயக்குமார், வட்டகுழு உறுப்பினர்கள் எம்.முருகன்,டி.ராமமூர்த்தி, எஸ்.நீலா, கிளைச் செயலாளர்கள் என்.மேகநாதன், யு.மதன்ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.