தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வங்கி வளாகத்தில் சேறும் சகதியும்சிமெண்ட் தளம் கேட்டு சிபிஎம் நாற்று நடும் போராட்டம்

2 hours before
வங்கி வளாகத்தில் சேறும் சகதியும்சிமெண்ட் தளம் கேட்டு சிபிஎம் நாற்று நடும் போராட்டம்

வங்கி வளாகத்தில் சேறும் சகதியும்சிமெண்ட் தளம் கேட்டு சிபிஎம் நாற்று நடும் போராட்டம்

விழுப்புரம், நவ. 27-விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி கிராமத்தில் உள்ள ஐஐ-520 தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வளாகம் முழுவதும் சேறும் சகதியாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.இந்த வளாகத்தில் சுற்றுப்புற பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் வங்கி கட்டிடமும், இரண்டு நியாய விலைக் கடைகளும் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு நாளும் சுமார் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் இந்த வளா கத்திற்குள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும், விவசாயிகள் வங்கி அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் அவ திப்பட்டு வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் இடுபொருளான உரம், யூரியா எடுத்து வருவதற்கு இந்த சேற்றில் நடந்து வர முடியாவில்லை. வாகனமும் உள்ளே வரமுடிய வில்லை. மழை பெய்யும்போதெல்லாம் இதே நிலை மைதான் தொடர்கிறது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை முறையீடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வங்கி வளாகத்தில் சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிபிஎம் கண்டாச்சிபுரம் வட்டக்குழு சார்பில் வெள்ளியன்று (நவ.27) நாற்று நடும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி வெள்ளியன்று நடைபெற்ற போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் சையத் ஜகாங்கீர் தலைமை தாங்கி னார்.

வட்டச் செயலாளர் எஸ்.கணபதி, வட்டக்குழு உறுப்பினர்கள் வி.தன லட்சுமி, எம்.பாபு, டி.ராஜ கோபால், கிளைச் செய லாளர்கள் ஜி.செந்தில், என்.செந்தில்முருகன், கே.வீரன், ஜே.அலாவுதீன், எஸ்.ஆறுமுகம், வீ.பால

கிருஷ்ணன், கே.விஜய குமார், வி.தண்டபாணி, ஆர்.முனுசாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்களை எழுப்பியவாறு வங்கி வளாகத்தில் உள்ள சேறும் சக்தியில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.