தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் முற்றுகையால் வீடுர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு!

13 Jul 2026, 12:59 am
சிபிஎம் முற்றுகையால் வீடுர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு!
<p><strong>சிபிஎம் முற்றுகையால் வீடுர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு!</strong></p><p>விழுப்புரம், ஜூலை 12- விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டில் உள்ள மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தை, சீரான குடிநீர் கேட்டு வீடுர் கிராம அருந்ததியர் சமூக மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடுர் கிராமத்தில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூக மக்க ளுக்குப் பல நாட்களாகச் சீரான குடி நீர் கிடைக்காததால் மக்கள் கடும் அவ திக்குள்ளாகி வந்தனர். இது குறித்து அதி காரிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வீடுர் கிளை செய லாளர்கள் பி.மூவேந்தன் மற்றும் வி.பிரகாஷ் ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டு வந்து மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மயிலம் ஒன்றிய செயலாளர் டி.கெஜமூர்த்தி, இப்பகுதி மக்கள் அன்றாடம் குடிநீருக்காகச் சந்திக்கும் இன்னல்களை விளக்கிப் பேசினார். சம்பந்தப்பட்ட துறை போர்க்கால அடிப்படையில் குடிநீர் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். போராட்டத்தின் தீவிரத்தைக் கண்டு, மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் உடனடியாக மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுத் கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.