தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வேலூரில் கையகப்படுத்தப்பட்ட 23.84 ஏக்கர் நிலத்தை மீண்டும் ஒப்படைக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
1 hour before

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வேலூரில் கையகப்படுத்தப்பட்ட 23.84 ஏக்கர் நிலத்தை மீண்டும் ஒப்படைக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

வேலூர், நவ. 23-வேலூர் மாவட்டம் அலமேலு மங்காபுரம் அடுத்த நடப்பாறை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட 23.84 ஏக்கர் நிலத்தை மீண்டும் நிலஉரிமையாளர்களிடமே ஒப்படைக்கக் கோரி, சிபிஎம் மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு திங்க ளன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.கடந்த 1981-ஆம் ஆண்டு நடப்பாறை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 485 ஏக்கர்

நிலத்தைக் கையகப்படுத்தி யது. பின்னர் அதில் 87 ஏக்கர் உரிமையாளர்களிடமும் திருப்பி அளிக்கப்பட்டு மீதி நிலம் தனியாருக்கு விற்கப்பட்டு, மீதமுள்ள 23.84 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி வைத்துக்கொண்டு எவ்விதத் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. அப்போதிலிருந்தே அந்த இடத்தைத் திரும்ப ஒப்படைக்கக் கோரி அப்பகுதியில் நான்கு தலை முறைகளாக வசித்து வரும் 19 குடும்பத்தினர் வீடுகட்டி வாழ்ந்து வருகின்றனர் . மேலும் அங்கு 6 குடிநீர் கிணறு மற்றும் சிறிய நிலப்பரப்பில் விவசாயமும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 50 நாட்களுக்கு முன்பு மக்களை அங்கிருந்து வெளி

யேறுமாறு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். இதையடுத்து, பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ உயிரினங்கள் அச்சத்திற்கு இடையிலும் குழந்தைகளுடன் அப்பகுதி

யிலேயே கூடாரம் அமைத்துமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொட ர்ந்து, சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகத்திற்குச் சென்ற மக்கள், மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துத் தங்களது நிலத்தை மீட்டுத் தரு மாறு கோரிக்கை மனு அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு வேலூர் வடக்கு தாலுகா செயலாளர் கே.பாண்டுரங்கன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி துவக்கி வைத்து உரை யாற்றினார். இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜெ.சீனிவாசன் கே.சாமிநாதன்,பி.காத்தவராயன், எஸ்.பரசுராமன்,மாவட்டக் குழு உறுப்பின ர்கள் வி.நாகேந்திரன், சி.எஸ்.மகாலிங்கம், எம்.கணேஷ், பெ.திலீபன் மற்றும் அப்பகுதி பொது மக்கள் சார்பில் பிரகாஷ், கிருஷ்ணன், கவிதா, லட்சுமி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த தலைவர்களும் பொதுமக்களும், பயன்படுத்தப்படாமல் உள்ள 23.84 ஏக்கர் நிலத்தை மீண்டும் மக்க ளிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும், அங்கு வீடுகட்டி வசித்து வரும் குடும்பங்களுக்குப் பட்டா மற்றும் அடிப்படைக் கட்ட

மைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதற்கிடையில் இந்த பிரச்சனை குறித்து வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக அரசின் 3 தவெக அமைச்சர்கள் மற்றும் 4 எம்எல்ஏக்களிடமும் மனு அளித்த நிலையில் இது வரை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அரசின் இந்தசெயல்பாடும் ஏற்கதக்க தல்ல, பாதிக்கப்பட்ட மக்க ளுக்கே அவர்கள் இடத்தை திருப்பி அளிக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசும் வேலூர் மாவட்ட நிர்வாகமும் ஆவண செய்ய வேண்டுமென சிபிஎம் வேலூர் - திருப்பத்தூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்வதாக மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி தெரிவித்துள்ளார்.