சிபிஎம் போராட்டத்தால் சிறுபான்மையினருக்கு வீட்டுமனைப்பட்டா
29 Oct 2026, 11:50 pm

சிபிஎம் போராட்டத்தால் சிறுபான்மையினருக்கு வீட்டுமனைப்பட்டா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வசிக்கும் சிறுபான்மை இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் கோரிக்கை இயக்கம் நடத்தப்பட்டது. அதன் விளைவாக முதல் தவணையாக 22 பேருக்கு மாலையிட்டான் குப்பம் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. வீட்டுமனை பட்டா பெற்ற சிறுபான்மை இன மக்கள், பட்டா கிடைப்பதற்கு காரணமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்து, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ந. பாண்டி, மாவட்டச் செயலாளர் ப. செல்வன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து, குர்ஆன் புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தனர்.இந்த நிகழ்வில், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட நிர்வாகிகள் யாசர் அராபத், அப்துல் காதர், சிபிஎம் நிர்வாகிகள் சுகுணா, அண்ணாமலை, மற்றும் வர்க்கவெகுஜன அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.